disalbe Right click

Thursday, December 22, 2016

நோய்களை தீர்க்கும் எனிமா!


நோய்களை தீர்க்கும் எனிமா!

நாள்பட்ட நோய்களின் தீவிரத்தை பெருமளவில் குறைத்து, பலருக்கு முழு நிவாரணமும் தரவல்ல இயற்கை மருத்துவ முறை. பல நோய்களையும் நமது உடல்தான் தீர்க்க வேண்டும் என்பது இயற்கை மருத்துவத்தின் முடிந்த முடிவு. 

அவ்வாறு உடல் செயல்படுவதற்கு நம் குடலைச் சுத்தம் செய்து கொள்வது இன்றியமையாதது. 'குடலைக் கழுவி உடலை வளர்'. நமக்கு வரும் பல்வேறு நோய்களில் பல மலச் சிக்கலை அடிப்படையாக வைத்தே வருகின்றன என்னும் கருத்து உண்டு.  அது உண்மையும் கூட. 

அதனால் காலாகாலத்தில் வெளியேற வேண்டிய கழிவுகள் உடலுக்குள் தங்கும் நேரம் அதிகமாவதால் உடம்பிலும் ரத்தத்திலும் தேவையற்ற கழிவுகள் கலந்து நோய்களாக மாற்றமடைகின்றன. அதனால் பெரும்பாலோருக்கு முதலில் வருவது பைல்ஸ் மூலநோய் ஆகும். 

அந்த நோய்க்கு முன்னதாகப் பலகாலமும் அதற்குச் சிகிச்சை செய்துகொண்டே பலகாலமும் துன்பப்படுபவர்கள் ஏராளம். எனவே எந்தக் காரணத்தைமுன்னிட்டும் மலச்ச சிக்கலுக்கு இடம்கொடுக்கவே கூடாது. ஆனால் அதனால் அனேகம் பேர் சிரமப்படுவதைப் பார்க்கலாம்.  நமது நண்பர்களும்கூட இருக்ககூடும்! 

மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் இருப்பவர்கள் உடனடியாகச் சிரமத்தைக் குறைத்துக்கொள்ள எளிய முறை உள்ளது. அது இயற்கையான முறை. அதுதான் இயற்கை எனிமா! இதை அஹிம்சை எனிமா என்றும் சொல்வார்கள்!

உடலுக்கு ஒத்துவராத உணவு உண்ணும் நாட்களிலோ மற்ற நாட்களிலோ காலையில் அல்லது இரவு சுத்தமான தண்ணீரைமட்டும் பயன்படுத்தி நாமே வயிற்றைச் சுத்தம் செய்துகொள்ளலாம். அதற்கு இது சிறந்த உபகரணமாகப் பயன்படுகிறது. 

இயற்கை மருத்துவத்தில் முக்கியமாகப் பயன்படுத்தப்படுவது இந்த இயற்கை எனிமா. 

எந்த நோயானாலும் உணவை நிறுத்தி எனிமா எடுத்துக் கொள்ள வேண்டும்.  

வயிறு காலியானாலே நோயின் தீவிரம் குறையும்.  சுத்தமான குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரை எனிமா கேனில் நிரப்பி செருகி (nozzle) மூலம் ஆசனவாயில் நுழைத்து சிறிது முன் சாய்ந்தோ அல்லது குனிந்தோ நிற்பதின் மூலமாகவோ அல்லது பக்கவாட்டில் படுத்திருப்பதின் மூலமாகவோ, கேனில் நிரம்பிய நீர் மலக்குடலில் செல்லும். சிறிது நேரம் நீரை மலக்குடலுக்குள் நிறுத்தி (ஓரிரு நிமிடங்கள் கழித்து) பின்னர் வெளியேற்றினால் மலம் நீருடன் சேர்ந்து பீய்ச்சிக் கொண்டு வெளி வரும்.

வயிற்றில் கிருமிகள் இருப்பின், வேப்பிலையை வேகவைத்து ஆறவைத்த நீர் (அ) ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாற்றில் நீர் கலந்தும் எனிமா கேனின் உதவியுடன் மேற்குறிப்பிட்ட முறையில் உள்ளே ஏற்றி வெளியேற்றலாம். இந்த முறையால் மலச்சிக்கல், வயிற்றுச் சூடு, வயிற்று வலி, பேதிகள், உணவு சீரணம் ஆகாமை ஆகியவற்றிற்கு எனிமாவே கைகண்ட மருந்து என்கிறார். 

கடுமையான வயிற்றுப் போக்கு இருக்கும் போது எனிமா கொடுப்பதின் மூலம், பல தடவை பேதியாவதை தடுப்பதோடு, உடலின் சுரப்பு நீர்கள் வெளியேறுவதையும் தடுக்க இயலும்

எனிமா சிகிச்சை என்பது ரிஷிகளால் பண்டைய காலம் தொட்டே கண்டுபிடிக்கப்பட்டு முறைப்படுத்தப்பட்ட ஒரு முறையாகும். அஷ்டாங்க யோகத்தில், க்ரியாக்கள் என்று சொல்வார்கள். பலவகையில் உடலை சுத்தப்படுத்தும் முறைகளை ஷத்க்ரியாக்கள் என்று கூறுவார்கள். அதில் ஒன்று பஸ்திக்ரியா என்பது பஸ்திக்ரியாவின் நவீனப்படுத்தப்பட்ட முறையே எனிமா கேன் ஆகும்.

ச.பாலகிருஷ்ணன் கோயம்பத்தூர் 

நன்றி : தினமணி நாளிதழ் – 21.12.2016


No comments:

Post a Comment